English
(+94) 114 690 200

தேர்தல் செய்திகளின் பகுப்பாய்வு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் என்பது புதிய தேர்தல் முறையின் கீழ் நடாத்தப்படும் முதல் தேர்தலாகும். இந்நாட்டில் பத்திரிகை என்பது சமூக அரசியல் விடயங்கள் தொடர்பாக இன்னும் பிரபல்யமாக காணப்படும், மக்கள் உபயோகிக்கும் ஊடகம் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக பிரதான பத்திரிகைகள் கவனம் செலுத்தியுள்ள விடயங்கள் தொடர்பான பகுப்பாய்வொன்றினை வறுமை ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்டுள்ளது. 

2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் வாரங்களில் வீரகேசரி மற்றும் தினகரன் பத்திரிகைகளில் கவனம் செலுத்திய விடயங்கள் தொடர்பான பகுப்பாய்வு.  

உள்ளூராட்சி தேர்தலில் பொது சேவைகள்  தொடர்பான கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்குவது அவசியமாயினும் தேசிய அரசியல் தொடர்பாக  அதிக கவனம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. கிராமிய அபிவிருத்திகள் தொடர்பான விடயங்கள் கூட  தேசிய மட்டத்திலுள்ள அபிவிருத்திகள் மூலம் குறிப்பிட்டது காணக்கூடியதாக இருந்தது. ஆனாலும் பிரதான பத்திரிக்கைகளின் மூலம் பிரதேச தகவல்களை எதிர்பார்க்கிறமையும் சாத்தியமற்றது. ஆனாலும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக தேசிய மட்டத்திலான கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்கியதும் கேள்வி எழுப்பவேண்டிய விடயமாக உள்ளது. 

நடைபெறவுள்ள தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்காக 25% ஒதுக்கியதும், பெண்களின் பங்களிப்பு தொடர்பாக நல்ல கருத்துகளுக்கு இடமளித்தலும் ஒரு சிறந்த பார்வையாக குறிப்பிட முடியும். ஆனாலும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பாக இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது.  

புதிய தேர்தல் முறை தொடர்பான அறிவை அல்லது விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தமை குறைவாகக் காணப்பட்டது. தேர்தல் சட்டங்கள் தொடர்பான  விடயங்களை குறிப்பிட்டிருந்தாலும் தேர்தல் முறையை பற்றிய தெளிவான விளக்கம் இல்லாமல் இருந்ததும் குறிப்பிடவேண்டிய விடயம். ஜனநாயகத்திற்கு  வாக்களிப்பது எந்தளவு அவசியம் என்பதை பற்றியும், வாக்களிப்பின்போது சிறந்த பார்வையானது அவசியம் என்ற கருத்துகளுக்கும் இடமளித்து இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.